• Fri. Nov 13th, 2026

24×7 Live News

Apdin News

‘தாயகம் திரும்ப அழைப்பு, தயங்கும் இலங்கைத் தமிழர்கள்’ காரணம் என்ன? பிபிசி கள ஆய்வு

Byadmin

Nov 13, 2026


'தாயகம் திரும்ப அழைப்பு, தயங்கும் இலங்கைத் தமிழர்கள்' காரணம் என்ன? பிபிசி கள ஆய்வு

“28 ஆண்டுகள் தமிழ்நாட்டில் வசித்துவிட்டு 2018-இல் இலங்கைக்குத் திரும்பினேன். ஆனால், அங்கு இருக்கின்ற சூழ்நிலையை விட, இங்கு கஷ்டமான நிலவரம் உள்ளது. நிறைய பேர் வந்துட்டு, திரும்ப போய் விட்டார்கள்.”

இலங்கையில் வவுனியா பகுதியில் வசிக்கும் விஸ்வநாதன் கூறும் வார்த்தைகள் இவை.

கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தமிழ்நாட்டில் இருந்து இலங்கை திரும்பிய 10,000-க்கும் அதிகமானோரில் விஸ்வநாதனும் ஒருவர்.

‘எங்களுக்கு அடிப்படை வசதிகளை சரி செய்து கொடுத்தால் இலங்கையைவிட இந்தியாவிலேயே இருக்க விரும்புகிறோம். அகதிகள் என்கிற போர்வையில் தான் வைத்துள்ளீர்கள், ஆனாலும் எங்களுடைய வாழ்வாதாரத்திற்கு இந்தியாவே பரவாயில்லை.”

சென்னை அருகே உள்ள கும்மிடிப்பூண்டி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குணசேகரன் கூறும் வார்த்தைகள் இவை.

By admin