• Thu. Nov 12th, 2026

24×7 Live News

Apdin News

விஜய் சேதுபதியின் ‘இஞ்சி வெல்லம்’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

Byadmin

Nov 12, 2026


அமெரிக்காவில் நடைபெறும் எம்மி விருது வழங்கும் விழாவில்.. விருது பெற்ற கலைஞர்களுக்கு விருதினை வழங்கும் சிறப்பு அதிதியாக பங்குபற்றும் ஒரே இந்திய நட்சத்திர நடிகர் என்ற சிறப்பு கவுரவத்தை பெற்ற ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் ‘இஞ்சி வெல்லம்’ திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக பிரத்யேக காணொளி மூலம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்திய சினிமா வரலாற்றில் இடம் பிடித்த முத்திரை பதித்த படைப்பாளியான மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இஞ்சி வெல்லம்’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி – சாய் பல்லவி ஆகிய இருவரும் கதையை வழிநடத்திச் செல்லும் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

அவிக் முகபாத்தியாயா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘இசை புயல்’ ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் – மெட்ராஸ் டாக்கீஸ்-  இந்தியா டாக்கீஸ் பிரைவேட் லிமிடெட்-  ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் சுபாஷ்கரன் – மணிரத்னம் – சிவா ஆனந்த் – ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இத்திரைப்படம் எதிர் வரும் 2027 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என பிரத்யேக காணொளியை வெளியிட்டு படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இத்திரைப்படம் ஜனவரி மாதம் 29 ஆம் திகதி வெளியாகும் என்றும் படக் குழு உறுதிப்படுத்தி உள்ளது.

The post விஜய் சேதுபதியின் ‘இஞ்சி வெல்லம்’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு appeared first on Vanakkam London.

By admin