• Tue. Jul 21st, 2026

24×7 Live News

Apdin News

திருச்சியில் பட்டியல் கிறிஸ்தவ முதியவரை அடக்கம் செய்வதில் நீடித்த சிக்கல் – தேவாலயம் மீதான புகார் என்ன?

Byadmin

Jul 21, 2026


கோட்டப்பாளையம் கல்லறைத்தோட்டம்

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, கோட்டப்பாளையம் கல்லறைத்தோட்டம்

“அது கும்பகோணம் மறைமாவட்டத்துக்குச் சொந்தமான கல்லறை. அங்கு பட்டியல் சாதி கிறிஸ்தவர்களைப் புதைப்பதற்கு அனுமதியில்லை. இதை எதிர்த்து என் தந்தை நீதிமன்ற உத்தரவை வாங்கினார். ஆனால், அவரைப் புதைப்பதற்கே 15 மணிநேரம் போராடினோம்” என்கிறார் திருச்சி, துறையூரில் வசிக்கும் ராஜ் நோபிலி.

இவரது தந்தையும் ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியருமான ராஜூ, கடந்த 17 ஆம் தேதி உயிரிழந்தார். முசிறி சார்-ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு திங்கள்கிழமை அதிகாலை அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

திருச்சி மாவட்டம், துறையூரில் கோட்டப்பாளையம் ஊராட்சி அமைந்துள்ளது. விவசாயம் பிரதான தொழிலாக உள்ள இந்த ஊராட்சியில் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட கிறிஸ்தவ குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களில் எழுபதுக்கும் மேற்பட்ட தலித் கிறிஸ்தவ குடும்பங்கள் உள்ளன.

கோட்டப்பாளையம் ஊராட்சியில் மிகப் பழமையான புனித மேரி மக்தலீனா தேவாலயம் அமைந்துள்ளது.

தேவாலயமும் இங்கு நடைபெறும் தேர்த் திருவிழாவும் கோட்டப்பாளையம் ஊராட்சியின் அடையாளங்களாக உள்ளன. கும்பகோணம் மறைமாவட்டத்தின் கட்டுப்பாட்டில் தேவாலயம் உள்ளது.

By admin