• Sat. Nov 28th, 2026

24×7 Live News

Apdin News

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டது – கடந்த ஓராண்டில் என்ன நடந்தது? ஒரு மீள் பார்வை

Byadmin

Nov 28, 2026


திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டது - கடந்த ஓராண்டில் என்ன நடந்தது? ஒரு மீள் பார்வை
பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று முதல் தீர்ப்பு வெளியாகி கிட்டத்தட்ட ஓராண்டான நிலையில், முதன் முறையாக அந்த தூணில் தீபம் ஏற்றப்பட்டுள்ளது. மலை உச்சியில் உள்ள தூணில் இன்று (நவம்பர் 28) மாலை 5 மணியளவில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. பெரியளவிலான காடாத் துணி, கற்பூரம் ஆகியவை கொண்டு தீபம் ஏற்றப்பட்டது.

உச்ச நீதிமன்றம் நியமித்த ஓய்வுபெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் முன்னிலையில் தீபமேற்றப்பட்டது.இன்னும் இந்த விவகாரம் முடிவுக்கு வரவில்லை. அடுத்தடுத்த மேல்முறையீடுகள், நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் என நீளும் இந்த வழக்கின் பின்னணியைச் சற்றே விரிவாகப் பார்க்கலாம்.

திருப்பரங்குன்றம் மலையில் என்னென்ன இருக்கின்றன?

மதுரையின் மையப் பகுதியில் உள்ள பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து தென்மேற்கே சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் திருப்பரங்குன்றம் மலை அமைந்துள்ளது.

முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படைவீடாகக் கருதப்படும் சுப்பிரமணிய சுவாமி கோயில் இந்த மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.

கோவிலின் வலதுபுறமாகத் திரும்பி சுமார் 100 அடி சென்றால் சிக்கந்தர் பாதுஷா அவுலியா மசூதியை அடையலாம். அதைத் தாண்டி, மலையை நோக்கிச் செல்லும் படிக்கட்டுகளில் ஏறினால் மலையின் நடுப்பகுதியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலை அடையலாம்.

By admin