• Sun. Nov 8th, 2026

24×7 Live News

Apdin News

தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் வழக்கம் எப்போது தொடங்கியது? 8 கேள்வி – பதில்கள்

Byadmin

Nov 8, 2026


தீபாவளி, பட்டாசு

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

தீபாவளி என்றாலே புத்தாடைகள், இனிப்புகள், விளக்குகள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் கொண்டாட்டம் எனப் பல விஷயங்கள் நினைவுக்கு வரும். இவற்றுடன் பிரிக்க முடியாத ஒன்றாகப் பட்டாசுகளும் மாறிவிட்டன.

தீபாவளி நாளில் பட்டாசு வெடிப்பது பலருக்கு மகிழ்ச்சியின் அடையாளமாக, கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது. ஆனால், இந்த வழக்கம் எப்போது தொடங்கியது?

பட்டாசுகளின் வரலாறு, நாம் நினைப்பதைவிடப் பல நூற்றாண்டுகள் பின்னோக்கிச் செல்கிறது. போர், வேட்டை, அரச விழாக்கள், மதச் சடங்குகள் எனப் பல்வேறு சூழல்களில் வெடிபொருள்கள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன என்பதையும், அவை படிப்படியாக தீபாவளிக் கொண்டாட்டத்தின் ஓர் அங்கமாக மாறியதையும் வரலாற்றுத் தகவல்களின் அடிப்படையில் பார்க்கலாம்.

1. தீபாவளியன்று பட்டாசு வெடிப்பது பற்றிப் புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதா?

பட்டாசு, தீபாவளி

புராணங்கள் மற்றும் பண்டைய நூல்களில் இடம்பெற்றுள்ள குறிப்புகளை ஆராய்ந்தால், தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் வழக்கம் இருந்ததாகத் தெரியவில்லை என்றார் பஞ்சாப் பல்கலைக் கழக வரலாற்றுப் பேராசிரியர் ராஜீவ் லோச்சன்.

“பழமையான இலக்கியங்களிலும் புராணங்களிலும் தீபாவளியன்று பட்டாசு வெடித்துக் கொண்டாடியதற்கான தெளிவான குறிப்புகள் இதுவரை கிடைக்கவில்லை. மாறாக, வீடுகளில் விளக்கேற்றிக் கொண்டாடியதற்கான குறிப்புகள் காணப்படுகின்றன.”



By admin