பான் இந்திய நட்சத்திர நடிகரான துல்கர் சல்மான் அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘ஏ ஒ டி- AOT ( ஆகாசம்லு ஒக தாரா) திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் பவன் சடினேனி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஏ ஒ டி ‘ திரைப்படத்தில் துல்கர் சல்மான், சாத்விகா வீரவல்லி , ஸ்ருதிஹாசன் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். ஃபீல் குட் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை கீதா ஆர்ட்ஸ், ஸ்வப்னா சினிமா, லைட் பாக்ஸ் மீடியா ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் சந்த்ப் குன்னம்- ரம்யா குன்னம் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
எதிர்வரும் நவம்பர் மாதம் இருபதாம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதில் கிராமப்புறத்தில் பிறந்து விண்வெளியில் பறக்கும் மாணவியின் கனவு தொடர்பான விடயங்களும் அதனை சாத்தியப்படுத்துவதற்கான விடயங்களும் இடம் பிடித்திருப்பதால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.
அத்துடன் இந்த திரைப்படத்தின் டீசரில் நடிகை ஸ்ருதிஹாசன் சிகரெட்டை புகைப்பது போன்ற காட்சிகள் இடம் பிடித்திருப்பதால் பலரின் எதிர்மறையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது.
The post துல்கர் சல்மான் நடிக்கும் ‘ஏ ஒ டி’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு appeared first on Vanakkam London.