எம்.பி. ஆவேசம்:
“இத்தகைய சூழலில், பிரதமர் நரேந்திர மோடி பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலப்பது பற்றிப் பேசும்போது, சிலர் எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்குகிறார்கள். எத்தனால் வேலை செய்யாது, தூய பெட்ரோல்தான் பயன்படும் என்று ஒரு பிரச்சாரம் நடைபெறுகிறது. தூய பெட்ரோல் என்ன உங்கள் அப்பா வீட்டிலிருந்தா வருகிறது? நாட்டில் தூய பெட்ரோல் இல்லையென்றால், அது எங்கிருந்து வரும்?” என்று அவர் கேட்டார்.
இந்தியாவில் உள்ள வாகனங்கள் எத்தனால் கலப்பு எரிபொருளில் இயங்கக்கூடியவை என்றும், ஆனால் சிலர் அதைப் பயன்படுத்த வேண்டாம் என்று கூறுவதாகவும் மிஸ்ரா தெரிவித்தார்.
பெட்ரோலில் எத்தனால் கலப்பதை ஆதரித்துப் பேசிய அவர், பிரேசிலில் வாகனங்கள் 100 சதவீத எத்தனாலில் இயங்குவதாகவும், அங்கு வாகனங்களில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் கூறினார்.