• Thu. Nov 12th, 2026

24×7 Live News

Apdin News

தேசிய கூடைப்பந்தாட்டப் போட்டியில் மூன்றாம் இடத்தைப் பிடித்த யாழ். சென். ஜோன்ஸ்

Byadmin

Nov 12, 2026


இலங்கை பாடசாலைகள் கூடைப்பந்தாட்டச் சங்கத்தினால் நடத்தப்பட்ட Sri Lankan Schools Basketball Tournament – Division B, Tier 2 பிரிவில், யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி (St. John’s College, Jaffna) அணியினர் மூன்றாம் இடத்தைப் (2nd Runners-Up) பெற்று சாதனை படைத்துள்ளனர்.

மூன்றாம் இடத்திற்கான போட்டியில் கொழும்பு மகாநாமா கல்லூரி அணியை எதிர்கொண்ட சென். ஜோன்ஸ் கல்லூரி வீரர்கள், இறுதிவரை நீடித்த விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில் 48–47 என்ற புள்ளிகள் கணக்கில் ஒரு புள்ளி வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்தனர். இவர்களது பயிற்றுவிப்பாளராக என்.ஏ.நிரோஷன் கடமையாற்றிவருகின்றார்.

இலண்டனில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள ‘KINGS OF GAANA 2026’ – நுழைவு சீட்டுகள் விற்பனை ஆரம்பம்

The post தேசிய கூடைப்பந்தாட்டப் போட்டியில் மூன்றாம் இடத்தைப் பிடித்த யாழ். சென். ஜோன்ஸ் appeared first on Vanakkam London.

By admin