• Thu. Nov 5th, 2026

24×7 Live News

Apdin News

தேர்தல் தோல்விக்கு பிறகு உலகை தனது நடவடிக்கைகளால் திரும்பி பார்க்க வைக்க டிரம்ப் என்ன செய்யக்கூடும்?

Byadmin

Nov 5, 2026


வெள்ளை மாளிகையின் கிழக்குப் பகுதியில் (East Wing) பிரம்மாண்ட நடன அரங்கம் கட்டும் பணி நிறைவடையும் நிலையில், புதன்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். அவரது கோட் ஜாக்கெட்டில் அமெரிக்கக் கொடியும், தலையில் முன்புறம் 'USA' என்ற எழுத்துகள் கொண்ட வெள்ளை நிற பேஸ்பால் தொப்பியும் உள்ளன. அவர் வெள்ளைச் சட்டையும் சிவப்பு நிற டையும் அணிந்துள்ளார்.

டொனால்ட் டிரம்ப் எப்போதும் எதையும் மிகைப்படுத்திப் பேசுபவர். அமெரிக்காவின் பெரும்பான்மையான வாக்காளர்கள் அவருக்குப் பெரும் தோல்வியை அளித்திருப்பதில் ஒருவித அரசியல் ஊழ்வினை இருக்கிறது.

ஆனால், தனது அரசியல் வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தை நோக்கிச் செல்லும் டிரம்ப், அவ்வளவு எளிதாக அதிகாரத்தைக் கைவிட்டுவிடுவார் என்று எதிர்பார்க்க முடியாது.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மையை இழப்பது, உள்நாட்டில் தனது விருப்பப்படி முடிவுகளை எடுக்கவும், அரசியல் காய்நகர்த்தல்களை மேற்கொள்ளவும், குழப்பங்களை ஏற்படுத்தவும் அவருக்கு இருக்கும் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும்.

ஆனால், வெளிநாட்டு விவகாரங்களில் நிலைமை வேறுபட்டிருக்கலாம்.

அமெரிக்க அதிபராகவும், அந்நாட்டின் ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியாகவும் இருக்கும் டிரம்ப், அமெரிக்காவின் ராணுவ வலிமையைப் பயன்படுத்துவதற்கு இன்னமும் பரந்த அதிகாரங்களைக் கொண்டிருக்கிறார்.



By admin