• Sun. Apr 26th, 2026

24×7 Live News

Apdin News

நடிகர் அர்ஜுன் நடிக்கும் ‘பிளாஸ்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Byadmin

Apr 26, 2026


‘எக்சன் கிங்’ அர்ஜுன் – பிரீத்தி முகுந்தன்- அபிராமி -ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ‘ பிளாஸ்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பிளாஸ்ட்’ திரைப்படத்தில் அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன், ஜான் கொக்கன் , அர்ஜுன் சிதம்பரம்,  விவேக் பிரசன்னா,  பவன், திலீபன், வினோத் சாகர் ,பாலா ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்திருக்கிறார். மெடிக்கல் மாஃபியா பின்னணியில் எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் கல்பாத்தி எஸ். அகோரம் -கல்பாத்தி எஸ். கணேஷ் – கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தருணத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கதாபாத்திரங்கள் ஆயுதங்கள் ஏந்தி ஆத்திரத்துடன் தோன்றுவதும்.. பின்னணியில் மருத்துவ மாத்திரைகள் சிதறி இருப்பதும் படத்தை பற்றிய எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது.

 

The post நடிகர் அர்ஜுன் நடிக்கும் ‘பிளாஸ்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு appeared first on Vanakkam London.

By admin