• Tue. Apr 28th, 2026

24×7 Live News

Apdin News

CSK Vs GT: சென்னையில் அசத்திய சாய் சுதர்ஷன் – சூப்பர் கிங்ஸை வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ்

Byadmin

Apr 26, 2026


சென்னையில் அசத்திய சாய் சுதர்ஷன். சூப்பர் கிங்ஸை வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ்

பட மூலாதாரம், ANI

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

ஐபிஎல் 2026 தொடரில் இன்று (ஏப்ரல் 26) சேப்பாக்கத்தில் நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம் குஜராத் அணி 8 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியது. 6 புள்ளிகளோடு இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆறாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது.

டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

சிஎஸ்கே அணியில் இந்தப் போட்டிக்கான பிளேயிங் லெவனில் உர்வில் பட்டேல் சேர்க்கப்பட்டிருக்கிறார். டைட்டன்ஸ் அணியில் அர்ஷத் கான் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டமிழக்காமல் 74 ரன்கள் எடுத்தார். குஜராத் டைட்டன்ஸ் பௌலர் ககிஸோ ரபாடா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

By admin