• Mon. Apr 27th, 2026

24×7 Live News

Apdin News

156 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கொல்கத்தா – ப்ளே ஆஃப் கனவை தக்கவைக்குமா லக்னோ?

Byadmin

Apr 26, 2026


ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான 2வது போட்டி இன்று லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

போட்டியில் முதலில் டாஸ் வென்ற லக்னோ பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரிங்கு சிங் 83 ரன்கள் அடித்தார்.

லக்னோ தரப்பில் மொஷித் கான் 5 விக்கெட்டுகளும், ஜார்ஜ் லிண்டே 1 விக்கெட்டும் வீழ்த்தினார்.

37வது லீக் போட்டியில் இன்று சென்னை-குஜராத் அணிகள் எப்படி விளையாடியதோ அதேப்போலவே லக்னோ – கொல்கத்தா போட்டியின் முதல் பாதியும் நிகழ்ந்துள்ளது.

தொடர்ந்து 156 ரன்களை இலக்காக கொண்டு லக்னோ பேட்டிங்கை தொடர உள்ளது. பிளே-ஆஃப் சுற்று வாய்ப்பில் நீடிக்க இரு அணிகளுக்கும் இந்த வெற்றி மிகவும் அவசியமானது. தற்போது லக்னோ புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்திலும், கொல்கத்தா 10-வது இடத்திலும் உள்ளன.

By admin