நடிகர் ‘கயல்’ சந்திரன் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘சிங்கா’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘முத்தே..’ எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் ராஜா துரை சிங்கம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சிங்கா ‘ திரைப்படத்தில் ‘கயல்’ சந்திரன், சிஜா ரோஸ், மீனாட்சி ரவீந்திரன், ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
அசோக் குமார் ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மனோஜ் சின்னசாமி இசையமைத்திருக்கிறார். கிராமிய பின்னணியில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை எஸ் ஆர் பிலிம்ஸ் மற்றும் ருத்ரம் சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் வேலாயுதம் ராஜேந்திரன் ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள்.
இந்தத் திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில் இதில் இடம் பிடித்த ‘முத்தே முத்தார தங்கத் தேரே.. ‘எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த பாடலை பாடலாசிரியர் மணி அமுதவன் எழுத, பின்னணி பாடகர் சத்யப் பிரகாஷ் பாடியிருக்கிறார். இந்த பாடலும் , பாடலுக்கான காணொளியும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
The post நடிகர் கயல் சந்திரன் நடிக்கும் ‘சிங்கா’ படத்தின் அப்டேட் appeared first on Vanakkam London.