9
தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகரான அசோக் செல்வன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன் டி ஆர் அவருடைய சமூக ஊடகத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன், சபுமோன், கதிர் பாலு, மகா டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார்.
ரொமாண்டிக் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஐங்கரன் ஃபிலிம் இன்டர்நேஷனல், ஹேப்பி ஹை பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கே. கருணாமூர்த்தி, அசோக் செல்வன், அபிநயா செல்வம் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் காதல், செண்டிமெண்ட், எக்சன், எமோஷன் என கொமர்சல் அம்சங்களுடன் இருப்பதால் அனைத்து தரப்பு ரசிகர்களின் கவனத்தையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.
இதன் காரணமாக இந்த முன்னோட்டம் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் ஒன்றரை மில்லியனுக்கும் மேற்பட்ட டிஜிட்டல் பார்வைகளை பெற்று சாதனை படைத்து வருகிறது.