• Fri. Sep 4th, 2026

24×7 Live News

Apdin News

நடிகர் தக்ஷன் விஜய் நடிக்கும் ‘துரோகம் பழகு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Byadmin

Sep 4, 2026


நடிகரும், சமூக செயற்பாட்டாளருமான தக்ஷன் விஜய் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘துரோகம் பழகு’  திரைப்படத்தில் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

இதனை இயக்குநர் ஆர்.கே. செல்வமணி, நடிகர்கள் எஸ். வி. சேகர், ராம்கி, நட்டி நட்ராஜ், நடிகைகள் இனியா, பூனம் பஜ்வா, நந்திதா ஸ்வேதா, அஸ்மிதா சிங் ஆகியோர் அவர்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் சீயோன் ராஜா இயக்கத்தில் உருவாகி வரும் ‘துரோகம் பழகு’ திரைப்படத்தில் தக்ஷன் விஜய் , ‘லொள்ளு சபா’ ஜீவா, ஜானகி, வனிதா விஜயகுமார், ஜி. எம். குமார், கஞ்சா கருப்பு ,திவாகர், அமுதவாணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

வி. பி. வினு பெருமாள் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பாலா – ராஜா ஆகிய இருவர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். கிராமிய பின்னணியில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மகிழ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சி. பியூலா மகிழ் தயாரித்திருக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” சில காயங்கள் ஒருபோதும் மன்னிக்கப்படுவதில்லை, என்ற ஒரு உணர்வை மையப்படுத்தி இப்படத்தில் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. துரோகம் ,நம்பிக்கை, உறவுகள், உணர்வுகள் ஆகியவற்றின் பின்னணியில் மனிதர்கள் எதிர்கொள்ளும் வாழ்வியலை இப்படம் விவரிக்கிறது” என்றார்.

படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்குப் பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இது ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

By admin