• Fri. Sep 4th, 2026

24×7 Live News

Apdin News

பாம்புக்கடி விபத்துகளில் எவ்வளவு விரைவாக சிகிச்சையைத் தொடங்க வேண்டும்? இல்லாவிட்டால் என்ன ஆபத்து?

Byadmin

Sep 4, 2026


மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தகவலின்படி, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 30 முதல் 40 லட்சம் பாம்புக்கடி சம்பவங்கள் ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் சுமார் 50,000 பேர் உயிரிழக்கின்றனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாம்புக் கடி சம்பவங்களின்போது சிகிச்சையில் ஏற்படும் தாமதம் உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடும்

    • எழுதியவர், ஹர்மன்தீப் சிங்
    • பதவி, பிபிசி பஞ்சாபி
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

ஒவ்வோர் ஆண்டும் பருவமழைக் காலத்தில் பாம்புக்கடி சம்பவங்கள் அதிகரிக்கின்றன. இதேபோன்ற ஒரு சம்பவம் லூதியானா மாவட்டம் பாசியன் கிராமத்தில் நிகழ்ந்துள்ளது. இதில் உடன்பிறந்த இரு குழந்தைகள் பாம்புக்கடியால் உயிரிழந்தனர்.

ரக்ஷா பந்தன் நாளன்று, 8 வயது ஜோபன்பிரீத், அவரது 6 வயது சகோதரி ஜஸ்பிரீத் ஆகிய இருவரும் பாம்புக்கடியால் உயிரிழந்தனர். இரு குழந்தைகளும் தங்கள் பாட்டிக்கு அருகில், வீட்டின் அறைகளுக்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்தனர்.

திடீரென, பிற்பகல் 3 மணியளவில், ஏதோவொன்று தன்னைக் கடித்துவிட்டதாக ஜோபன்பிரீத் தனது பாட்டியிடம் தெரிவித்தார். ஆனால், அது பூச்சி அல்லது கொசுவாக இருக்கலாம் என குடும்பத்தினர் நினைத்தனர். சிறிது நேரத்திற்குப் பிறகு, அவரது சகோதரி ஜஸ்பிரீத்தும் ஏதோவொன்று தன்னைக் கடித்துவிட்டதாக தெரிவித்தார்.

இதற்கிடையில், குழந்தைகளின் உடல்நிலை மோசமடையத் தொடங்கியதுடன், சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் ஒரு பாம்பும் காணப்பட்டது. இதையடுத்து, குடும்பத்தினர் குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே ஜஸ்பிரீத் உயிரிழந்தார். அதேவேளையில், லூதியானாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜோபன்பிரீத்தும் உயிரிழந்தார்.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தகவல்படி, இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் 30 முதல் 40 லட்சம் பாம்புக்கடி சம்பவங்கள் ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் சுமார் 50,000 பேர் உயிரிழக்கின்றனர். உலகளவில் பாம்புக்கடியால் ஏற்படும் உயிரிழப்புகளில் இது கிட்டத்தட்ட பாதி என்றும் கூறப்பட்டுள்ளது.

By admin