பான் இந்திய நட்சத்திர நடிகரான துல்கர் சல்மான் நடிப்பில் தயாராகி வரும் ‘ஐ அம் கேம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அருகே அருகே’ எனத் தொடங்கும் முதல் பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ ஐ அம் கேம்’ திரைப்படத்தில் துல்கர் சல்மான், கயாடு லோஹர் , மிஷ்கின், ஆண்டனி வர்கீஸ், சம்யுக்தா விஸ்வநாதன் , கதிர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஜிம்ஷி காலீத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்திருக்கிறார். ஃபேண்டஸி வித் எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வேஃபரர் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
எதிர்வரும் இருபதாம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற ‘அருகே அருகே அவள் வந்தாளே..’ எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த பாடலை பாடலாசிரியர் விக்னேஷ் ராமகிருஷ்ணா எழுத, பின்னணி பாடகர் அர்மான் மாலிக் பாடி இருக்கிறார். இந்தப் பாடல் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் ,கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியிடப்பட்டிருக்கிறது.
துல்கர் சல்மானின் திரை பயணத்தில் அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்டிருக்கும் ‘ஐ அம் கேம்’ திரைப்படம் – ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழ் , தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகிறது.
The post நடிகர் துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு appeared first on Vanakkam London.