• Wed. Aug 12th, 2026

24×7 Live News

Apdin News

‘3 நாட்களில் வரன்’ – பெண் கிடைக்காமல் விரைவு திருமணம் செய்த ஆண்கள் மோசடி வலையில் சிக்கியது எப்படி?

Byadmin

Aug 12, 2026


கடுமையான பாலின விகித ஏற்றத்தாழ்வு காரணமாக, சீனாவில் திருமணத்துக்கு பெண்களுக்கு அதிக தேவை உருவாகியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடுமையான பாலின விகித ஏற்றத்தாழ்வு காரணமாக, சீனாவில் திருமணத்துக்கு பெண்களுக்கு அதிக தேவை உருவாகியுள்ளது.

37 வயதான வாங் ஜுவாங், தனக்கு திருமணம் நடைபெறும் என்ற நம்பிக்கையை கிட்டத்தட்ட இழந்துவிட்டார். அப்போது அவரது கவனத்தை திருமண வரன் பார்த்து தரும் விளம்பரங்கள் ஈர்த்தது.

பல ஆண்டுகள் ஒரு உறவை வளர்த்த பிறகு அது தோல்வியில் முடிவடையும் ஏமாற்றத்தைச் சந்திக்க வேண்டியதில்லை என்று அந்த விளம்பரங்கள் உறுதியளித்தன. அமைதியான குணமும், குடும்ப வாழ்க்கைக்கு அர்ப்பணிப்பும் கொண்ட பெண்ணை அறிமுகப்படுத்துவதாகவும் அவை கூறின.

“குய்சோவைச் சேர்ந்த பெண்கள் மிகவும் சிக்கனமாக வாழ்பவர்கள் என்று திருமணத் தொடர்பாளர்கள் என்னிடம் கூறினர்,” என்று வாங் நினைவுகூர்கிறார்.

“வீட்டு நிர்வாகத்தைச் சிறப்பாக கவனிப்பார்கள், வீட்டு வேலைகளில் திறமையானவர்கள், மேலும் அவர்களது குடும்பங்கள் மிகவும் ஏழ்மையானவை என்பதால், திருமணத்திற்குப் பிறகு உங்கள் குடும்பத்திலேயே நிலையாக வாழ்ந்து வாழ்க்கையை அமைத்துக்கொள்வார்கள் என்று அவர்கள் சொன்னார்கள்.”

அந்த நம்பிக்கையுடன், தனது வாழ்க்கைத் துணையைத் தேடி தென்மேற்கு சீனாவின் குய்சோ மாகாணத் தலைநகரமான குய்யாங்குக்கு வாங் பயணம் செய்தார்.

By admin