• Tue. Aug 11th, 2026

24×7 Live News

Apdin News

நடிகர் பஹத் பாசில் நடிக்கும் ‘டோன்ட் ட்ரபுள் தி ட்ரபுள்’ பட பாடலுக்கான காணொளி வெளியீடு

Byadmin

Aug 11, 2026


நடிகர் பகத் பாசில் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘டோன்ட் ட்ரிபிள் தி ட்ரபுள்’ எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘கேக்கு வாக்கு’ எனும் முதல் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.

தெலுங்கு இயக்குநர் ஷஷாங்க் எலெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்: எனும் திரைப்படத்தில் பகத் பாசில் முதன்மையான வேடத்தில் மாய ஜால வித்தை செய்யும் கலைஞராக நடித்திருக்கிறார். இவருடன் சாரா-  சௌரப் சச்தேவா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். கால பைரவா இசையமைக்கும் இந்த திரைப்படத்தை அர்கா மீடியா வொர்க்ஸ் மற்றும் ஷோயிங் பிசினஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் பதினோராம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் இந்திய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற ‘கேக்கு வாக்கு ‘ எனும் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர்கள் கால பைரவா மற்றும் வாசி ஆகியோர் எழுத, பின்னணி பாடகர்கள் காலபைரவா மற்றும் வாசி ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். றாப் இசையுடன் இணைந்து ஒலிக்கும் இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

By admin