குறைந்த முதலீட்டில் தயாராகும் தமிழ் திரைப்படங்களுக்கான நம்பிக்கை அளிக்கும் நட்சத்திர நடிகர் வெற்றி முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘லக்ஷ்மி காந்தன் கொலை வழக்கு’ எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற மகாகவி பாரதியாரின் ‘காதல் செய்வீர்’ எனும் பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
எழுத்தாளரும்… இயக்குநரும்.. சமூக செயற்பாட்டாளருமான.. தயாள் பத்மநாபன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லட்சுமி காந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தில் வெற்றி, ரங்கராஜ் பாண்டே, பிரிகிடா சகா, சரவணன், மாறன், லிசி அண்டனி, ‘அருவி’ மதன், இயக்குநரும், நடிகருமான சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எம். வி. பன்னீர்செல்வம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்திருக்கிறார். க்ரைம் திருவிழாவாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 2 எம் சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே வி சபரீஷ் தயாரித்துள்ளார்.
எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘காதலினால் மானுடர்க்கு கலவி உண்டாம்..’ என மகாகவி பாரதியார் எழுதிய காலத்தால் அழியாத கவிதையை பாடலாக்கி உள்ளனர். இந்தப் பாடலை பின்னணி பாடகர் விஜய் பிரகாஷ் மற்றும் பவித்ரா சாரி ஆகியோர் பாடியுள்ளனர். மகாகவி பாரதியின் வரிகளை திரைப்பட இசையமைப்பாளரான தர்புகா சிவா நவீன இசை வடிவம் எனும் பெயரில் சிதைக்காமல் உணர்வுடன் பாடல் வழங்கி இருப்பதால்… இந்தப் பாடல் அனைத்து தரப்பு ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து இருக்கிறது.
The post நடிகர் வெற்றி நடிக்கும் ‘லட்சுமி காந்தன் கொலை வழக்கு’ படத்தின் அப்டேட் appeared first on Vanakkam London.