கங்கை நதிக்கரை
இந்த நாளில் காசியில் உள்ள கங்கை நதிக்கரையின் படித்துறைகளான அஸ்ஸி காட் முதல் ராஜ் காட் வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதனை காண திரள்கின்றனர். மாலை நேரத்தில் கங்கை நதிக்கரையில் லட்சக்கணக்கான அகல் விளக்குகள் ஏற்றப்படுகின்றன. அவற்றின் ஒளி கங்கை நீரில் பிரதிபலிப்பது கண்கொள்ளாக் காட்சியாக அமைகிறது.
பிரமாண்ட கங்கா ஆரத்தி, வேத மந்திரங்கள், பக்திப் பாடல்கள், இசை நிகழ்ச்சிகள் என நகரமே விழாக்கோலம் போல் காட்சியளிக்கிறது. இந்நாளில் புனி நக் கங்கையில் நீராடி வழிபட்டால் பாவங்கள் நீங்கி, புண்ணியமும் இறையருளும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை, விளக்குகளின் ஒளியில் காசி நகரமே விண்ணுலகம்போல் ஜொலிக்கும் தேவ தீபாவளி, இந்தியாவின் ஆன்மிகப் பாரம்பரியத்தையும், பக்தியின் மகத்துவத்தையும் உலகிற்கு எடுத் துக்காட்டும் ஓர் அற்புதமான திருவிழாவாகத் திகழ்கிறது.