• Sat. Aug 22nd, 2026

24×7 Live News

Apdin News

நரிமேடு: சென்னையில் ஆங்கிலேயர்களை அச்சுறுத்திய பகுதி முற்று முழுதாக அழிந்தது எப்படி?

Byadmin

Aug 22, 2026


நரிமேடு: சென்னையில் ஆங்கிலேயர்களை அச்சுறுத்திய பகுதி முற்று முழுதாக அழிந்தது எப்படி?

பட மூலாதாரம், Heritage Art/Heritage Images via Getty Images

படக்குறிப்பு, புனித ஜார்ஜ் கோட்டை (கோப்புப் படம்)

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையின் பிரதான பகுதியில் நரிமேடு என்று அழைக்கப்பட்ட ஓரிடம் இருந்துள்ளது. அந்த இடம், “ஆங்கிலேயர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதப்பட்டதாக” வரலாற்று ஆய்வாளர் வி. ஸ்ரீராம் கூறுகிறார்.

ஆங்கிலேயர்களுக்கு நரிமேடு பகுதி அச்சுறுத்தலாக மாறியது ஏன்? சென்னையின் வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற அந்தப் பகுதி அழிவைச் சந்தித்தது எப்படி?

மதராஸ் உருவானதைக் குறிப்பிடும் நாளாக ஆண்டுதோறும் ஆகஸ்ட் 22ஆம் தேதி ‘சென்னை தினம்’ கொண்டாடப்படுகிறது.

கடந்த 1639ஆம் ஆண்டு விஜயநகரப் பேரரசர் பெத்த வேங்கட ராயரின் அனுமதியுடன், ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் பிரதிநிதி பிரான்சிஸ் டே, உள்ளூர் நாயக்க ஆட்சியாளரிடம் இருந்து மதராசப்பட்டினம் கடற்கரைப் பகுதியை நில மானியமாகப் பெற்றார்.

ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் மதராஸ் குடியேற்றம் உருவாவதற்கு அடிப்படையான இந்த நில ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, 2026ஆம் ஆண்டுடன் 387 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

By admin