• Mon. Oct 19th, 2026

24×7 Live News

Apdin News

நாகை: ரூ.100 கோடி போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது எப்படி? தவெக மீது திமுக, அதிமுக சாடல்

Byadmin

Oct 19, 2026


நாகையில் 137 கிலோ போதைப்பொருள் பறிமுதல் - கைது செய்யப்பட்ட தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

நாகை மாவட்ட கடற்கரையில் உளவுத்துறை தகவலின் பேரில் மேற்கொண்ட நடவடிக்கையில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதித்துறையின் கீழ் செயல்படும் வருவாய் புலனாய்வுப் இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில் குற்றச்சாட்டப்படும் தவெக நிர்வாகி அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தவெகவை கடுமையாக விமர்சித்துள்ளன. இந்த நிலையில், யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக மின்சாரத் துறை அமைச்சர் சி. டி. ஆர். நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். என்ன நடந்தது?

வருவாய் புலனாய்வு இயக்குநரகம் கூறுவது என்ன?

நாகை மாவட்ட கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட நடவடிக்கை பற்றி மத்திய நிதித்துறையின் கீழ் செயல்படும் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் செய்திக்குறிப்பு ஒன்றை இன்று (18.10.2026) வெளியிட்டுள்ளது. இந்த நடவடிக்கையில் தடைசெய்யப்பட்ட செயற்கை போதைப்பொருளான கிரிஸ்டல் மெத்தாம்பேட்டமைனை (மொத்தம் 137 கிலோ) பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

அதன்படி, “நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஒரு கடற்கரைப் பகுதிக்கு, போதைப்பொருள் அடங்கிய தொகுப்பு ஒன்று கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து இலங்கைக்குக் கடத்துவதற்காக மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த துல்லியமான உளவுத்துறைத் தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

By admin