• Sun. Oct 11th, 2026

24×7 Live News

Apdin News

நாட்டில் அறிவிக்கப்படாத அவசரநிலை.. மக்களின் கேள்விகளிலிருந்து விலகி ஓடக்கூடாது என மத்திய அரசுக்கு சசி தரூர் அறிவுரை

Byadmin

Oct 11, 2026


தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி சிஜேபி தலையிலான போராட்டத்தில் நேற்று 3000 பேர் வரை கைது செய்யப்பட்டனர்.

போராட்டத்தில் கலந்துகொள்ள கிளம்பிய மம்தா பானர்ஜி, பினராயி விஜயன், அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரும் டெல்லியில் தனித்தனியே கைது செய்யப்பட்டனர்.

மேலும் சிஜேபி நிறுவனர் தீப்கே மற்றும் நிர்வாகிகள் டெல்லி விமான நிலையத்தில் விமானத்தில் வைத்தே கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் மத்திய அரசின் அடக்குமுறையை காங்கிரஸ் மூத்த தலைவரும் திருவனந்தபுரம் எம்.பியுமான சசி தரூர் விமர்சித்துள்ளார்.

நாட்டில் அறிவிக்கப்படாத அவசரநிலை நிலவுவதாகவும், இதுபோன்ற ‘எமர்-ஜென் சி’யை விட நமது இளம் தலைமுறைக்கு (ஜென் சி) ஒரு சிறந்த ஜனநாயகச் சூழல் தேவை என்றும் அவர் கூறினார்.

By admin