• Tue. May 5th, 2026

24×7 Live News

Apdin News

நார்வே எண்ணெய் அதிகம் கிடைத்தாலும் அதை மிக குறைவாகவே பயன்படுத்துவது ஏன்?

Byadmin

May 5, 2026


நார்வேயில் மக்கள் மிதிவண்டிகளை அதிகமாகப் பயன்படுத்துகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images

நார்வே உலகின் மிகப் பசுமையான நாடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இதன் நகரங்களில் மிதிவண்டிகள் நிறைந்து காணப்படுகின்றன, இதன் 98 சதவீத மின்சாரம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களில் இருந்து கிடைக்கிறது மற்றும் 2024-இல் விற்கப்பட்ட ஒவ்வொரு பத்து புதிய வாகனங்களில் ஒன்பது மின்சார வாகனங்கள் ஆகும்.

நார்வே சர்வதேச எரிசக்தி முகமையின் உறுப்பு நாடும் கூட. இங்கே மொத்த எரிசக்தி நுகர்வில் மின்சாரத்தின் பங்கு மிக அதிகம். கார்பன் வரி விதித்த ஆரம்பகால நாடுகளில் இதுவும் ஒன்று.

ஆனால் இதனுடன் சேர்த்து, இந்நாடு எரிவாயு மற்றும் எண்ணெய் உற்பத்தியைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாசு உண்டாக்கும் இந்த நிலக்கரி போன்ற எரிபொருள்கள் பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன, இதுதான் நார்வே அரசின் வருமானத்திற்குப் மிகப்பெரிய ஆதாரமாக உள்ளது.

இந்த வளங்களே ‘ஆயில் ஃபண்ட்’ என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற ‘சாவரின் வெல்த் ஃபண்ட்’ உருவாவதற்குக் காரணமாக அமைந்தன. இதுவே தாராளமான ஓய்வூதிய முறை மற்றும் நலன்புரி அரசின் நிதித் நிலைத்தன்மைக்கு உத்தரவாதம் அளிக்கிறது.

By admin