• Sat. Nov 21st, 2026

24×7 Live News

Apdin News

நியூஸிலாந்துக்கு இந்தியா சிறப்பான பதில்

Byadmin

Nov 21, 2026


வெலிங்டன், பேசின் ரிசேர்வ் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸில் பெற்ற 368 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடும் இந்தியா 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

யஷஸ்வி ஜய்ஸ்வால் (85), கே.எல். ராகுல் ஆகிய இருவரும் முதல் விக்கெட்டில் 130 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

ஆட்டநேர முடிவில் கே.எல். ராகுல் 52 ஓட்டங்களுடனும் தேவ்துத் படிக்கல் 16 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

நேற்றுமுன்தினம் ஆரம்பமான இப் போட்டியில் நியூஸிலாந்து ஆரம்பத்திலும் பின்னர் கடைசியிலும் பிரகாசிக்கத் தவறியது.

ஒரு கட்டத்தில் நியூஸிலாந்து 5 விக்கெட்களை இழந்து 70 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது.

எனினும், ஹென்றி நிக்கல்ஸ், க்ளென் பிலிப்ஸ் ஆகிய இருவரும் அபார சதங்கள் குவித்ததுடன் 6ஆவது விக்கெட்டில் 216 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை நல்ல நிலையில் இட்டனர்.

க்ளென் பிலிப்ஸ் 118 ஓட்டங்களைப் பெற்றார்.

அதன் பின்னர் மீண்டும் விக்கெட்கள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன.

ஆனால், ஹென்றி நிக்கல்ஸ் 9 மணித்தியாலங்களுக்கு மேல்  மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி   335 பந்துகளை எதிர்கொண்டு 21 பவுண்டறிகள் உட்பட 175 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 92 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஆகாஷ் தீப் 53 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அன்ஷுல் கம்போஜ் 69 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

The post நியூஸிலாந்துக்கு இந்தியா சிறப்பான பதில் appeared first on Vanakkam London.

By admin