• Wed. Nov 18th, 2026

24×7 Live News

Apdin News

நீரிழிவு நோய் இருந்தால் பிறப்புறுப்பில் பூஞ்சைத் தொற்று ஏற்படுமா? 6 முக்கிய அறிகுறிகள்

Byadmin

Nov 18, 2026


 நீரிழிவு நோயின் புறக்கணிக்கக் கூடாத 6 அறிகுறிகள்

    • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

சமீபத்தில் சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு உலகளவில் நீரிழிவு நோய் குறித்து முக்கியத் தரவுகளை வெளியிட்டது. அதன்படி, இந்தியாவில் 2024ஆம் ஆண்டு 3.86 கோடி பேர் தங்களுக்கு நீரிழிவு இருப்பதே தெரியாமல், பரிசோதனை செய்துகொள்ளாமல் இருந்துள்ளனர்.

இதில், முதல் பத்து நாடுகளில் சீனாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், வளரிளம் நபர்களிடையே 3,01,000 பேருக்கு டைப் 1 நீரிழிவு நோய் உள்ளது. 2024ஆம் ஆண்டில் 9 கோடி பேருடன் நீரிழிவு நோயில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இதே நிலை தொடர்ந்தால், 2050ஆம் ஆண்டுக்குள் 15.7 கோடி பேராக இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் தரவுகளை வைத்துப் பார்க்கையில் பல அறிகுறிகளை மக்கள் அலட்சியப்படுத்துவது அல்லது அச்சம் காரணமாக பரிசோதனை செய்துகொள்ளாமல் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர்.

நீரிழிவு நோய் என்றாலே, அதிகமாக தாகம் எடுத்தல், சிறுநீர் கழித்தல், பசியெடுத்தல், உடல் எடை குறைதல் போன்ற பொதுவான அறிகுறிகளையே பலரும் அறிந்திருப்பார்கள். ஆனால், பலரும் கண்டுகொள்ளாத, ஆனால், நீரிழிவு நோயின் தீவிரத்தை உணர்த்தக் கூடிய பல அறிகுறிகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

“நீரிழிவு நோய் உள்ளவர்களில் 50% பேருக்கு பெரும்பாலும் அறிகுறிகளே இருக்காது. அதனால்தான் 6 மாதங்களுக்கு ஒருமுறை நிச்சயமாக அதற்கான பரிசோதனைகளைச் செய்துகொள்ள வேண்டும் என்கிறோம். எந்த அறிகுறிகளும் இல்லாமல்கூட சில நேரங்களில் சர்க்கரை அளவு 300-400 எனப் பரிசோதனை முடிவுகள் வரலாம். அறிகுறிகள் இருக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல” என்கிறார் நீரிழிவு மற்றும் நாளமில்லா சுரப்பியல் மருத்துவர் எஸ். ராஜ்குமார்.

By admin