• Tue. Apr 14th, 2026

24×7 Live News

Apdin News

நெல்லுக்கு ஊக்கத்தொகை தருவதை மத்திய அரசு நிறுத்தச் சொல்கிறதா? ஸ்டாலின் குற்றச்சாட்டின் பின்னணி

Byadmin

Apr 12, 2026


நெல் உற்பத்திக்கான ஊக்கத்தொகையை மத்திய அரசு நிறுத்தச் சொல்கிறதா? ஸ்டாலின் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

நெல் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கு எதிராக பாஜக தலைமையிலான மத்திய அரசு அறிவுறுத்தி இருப்பதாக திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடந்த வெள்ளிக்கிழமை தஞ்சாவூரில் பேசியபோது தெரிவித்தார்.

இந்த ஊக்கத்தொகை நெல் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதாகக் குறிப்பிட்டு, மத்திய நிதியமைச்சகம், தமிழக அரசுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக அப்போது அவர் குறிப்பிட்டார்.

“நெல் உற்பத்தி அதிகரித்திருப்பது பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்துவதாக அந்தக் கடிதம் கூறுகிறது. எனவே நெல் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குவதை மாநில அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது,” என ஸடாலின் தெரிவித்தார்.

சட்டமன்ற தேர்தல் களத்தில் எதிர் தரப்பினர் மீது பரஸ்பரம் குற்றச்சாட்டுகள் வாரியிறைக்கப்படும் இந்த வேளையில், ஸ்டாலினின் இந்த பேச்சு விவசாயிகளிடையே அதிக கவனம் பெற்றுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் சங்கங்கள் என்ன சொல்கின்றன? பாஜக கூறுவது என்ன?

நெல் உற்பத்திக்கான ஊக்கத்தொகையை மத்திய அரசு நிறுத்தச் சொல்கிறதா? ஸ்டாலின் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images

மத்திய நிதியமைச்சகத்தின் கடிதம் கூறியது என்ன?

கடந்த ஜனவரி மாதம் மத்திய நிதியமைச்சகம் தமிழ்நாடு, கேரளா உள்படப் பல்வேறு மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், “சமீபத்திய ஆண்டுகளில் கோதுமை மற்றும் நெல்லின் அபரிமிதமான உற்பத்தி, பொது விநியோக அமைப்பு, இடையக விதிமுறைகள் மற்றும் பிற நலன்கள் மற்றும் அவசரத் தேவைகளுக்கான தேவைகளைவிட மிக அதிகமாக கோதுமை மற்றும் அரிசி கையிருப்பு உருவாவதற்கு வழிவகுத்துள்ளது.

By admin