• Tue. Apr 14th, 2026

24×7 Live News

Apdin News

CSK vs KKR: சிஎஸ்கே வெற்றிநடை தொடர இந்த வேகம் போதுமா? கொல்கத்தாவுடன் இன்று மோதல்

Byadmin

Apr 14, 2026


கடந்த சீசன் நேருக்கு நேர் மோதிய 2 போட்டிகளில் இவ்விரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்றன

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, கடந்த சீசன் நேருக்கு நேர் மோதிய 2 போட்டிகளில் இவ்விரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றன (கோப்புப் படம்)

சேப்பாக்கத்தில் இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. கடைசி 2 இடங்களில் இருக்கும் இவ்விரு அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டி இரு அணிகளுக்குமே மிகவும் முக்கியம்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இன்னும் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. அவர்கள் எடுத்த ஒரு புள்ளியும் ஒரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்டதால் வந்தது.

சூப்பர் கிங்ஸோ தொடர்ந்து 3 தோல்விகளுக்குப் பிறகு ஒருவழியாக வெற்றிப் பாதைக்குத் திரும்பியிருக்கிறது. பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என அனைத்து துறைகளிலுமே பிரச்னைகள் இருந்த நிலையில், தற்போது அவை கொஞ்சம் கொஞ்சமாக சரியாகத் தொடங்கியிருக்கின்றன.

முதல் மூன்று போட்டிகளும் தடுமாறிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தற்போது காம்பினேஷன் சரியாக அமைந்திருக்கிறது. அது எதிர்பார்த்த முடிவை பெற்றுக் கொடுத்திருக்கிறது.

சூப்பர் கிங்ஸுக்கு ஏற்பட்டிருக்கும் நம்பிக்கை

கடந்த போட்டியில் சூப்பர் கிங்ஸ் பௌலிங்கில் செய்த மாற்றங்கள் அணிக்கு நிறைய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தன. அறிமுக வாய்ப்பு பெற்ற குர்ஜப்னீத் சிங் அந்த செம்மண் ஆடுகளத்தில் நன்கு பவுன்ஸ் ஏற்படுத்தினார். டெத் ஓவர்களில் அதிகம் பயன்படுத்தப்படவில்லை என்றாலும் மிடில் ஓவர்களில் நன்கு பந்துவீசினார்.

By admin