• Sat. Aug 29th, 2026

24×7 Live News

Apdin News

நேபாளம்: இந்தியா திரும்பிய 21 தமிழர்கள் – ’90 பேரின் நிலை தெரியவில்லை’ என அமைச்சர் தகவல்

Byadmin

Aug 29, 2026


நேபாளத்திலிருந்து இந்தியா திரும்பிய தமிழ்நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள்

பட மூலாதாரம், X/DrSJaishankar

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

(இந்தப் பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது)

தமிழ்நாட்டில் இருந்து நேபாளத்திற்கு சென்றவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 400 ஆக இருக்கலாம் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார். அவர்கள் அனைவரையும் மீட்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் வெளியுறவுத் துறை செயலாளரைச் சந்தித்துப் பேசிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்மோகன், நேபாளத்தில் இருந்து டெல்லி திரும்பிய 21 பேரைச் சந்தித்துப் பேசியதாகவும் அவர்கள் அனைவரும் நல்ல உடல்நலத்தோடு இருப்பதாகவும் தெரிவித்தார். அவர்கள் அனைவரும் தங்களுடைய பாஸ்போர்ட் உள்ளிட்ட பயண ஆவணங்களைத் தவறவிட்டுவிட்டனர். அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்து இருப்பதாகவும் அவர்கள் விரைவில் சென்னை திரும்புவார்கள் என்றும் அவர் கூறினார்.

“அவர்கள் இன்னமும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. அவர்கள் 3 வாகனங்களில் பயணம் செய்தனர். முன்னாள் இருந்த வாகனமும், பின்னால் இருந்த வாகனமும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. அங்கிருந்து மிகவும் சிரமமான நிலப்பரப்பில் ஏறி வேறு இடத்தை அடைந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் மூத்த குடிமக்கள், எனவே தன்னம்பிக்கையுடன் போராடி இறுதியில் ராணுவ உதவியுடன் வந்து சேர்ந்துள்ளனர்” என அமைச்சர் தெரிவித்தார்.

கூடுதலாக, “57 பேர் கொண்ட குழுவில் 21 பேர் மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சியவர்களை எப்படியாவது தொடர்புகொள்ள கடுமையாக முயன்று கொண்டிருக்கிறோம். டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை தொடர்ந்து இயங்கி வருவகிறது. வெளியுறவுச் செயலாளருடனும் ஆலோசனை நடத்தியுள்ளோம். மத்திய அரசு அமைத்துள்ள கட்டுப்பாட்டு அறைக்கும் சென்று காணாமல் போனவர்களைத் தொடர்புகொள்ள முயன்றுள்ளோம்.”

By admin