• Sat. Aug 29th, 2026

24×7 Live News

Apdin News

மொத ராத்திரி திரைப்படத்தை மிகவும் ரசித்தேன் – நடிகர் சிலம்பரசன்

Byadmin

Aug 29, 2026


ஒரே இரவில் நடக்கும் கதை:

ஒரு கிராமத்து திருமண பின்னணியை கொண்டு, ஒரே இரவில் நடக்கும் கதை. இதில் வரும் பல கதாபாத்திரங்களும், சிறிய தருணங்களும் மிகவும் இயல்பானவையாக அமைந்திருக்கின்றன. கதைகளம், நகைச்சுவை, மனிதர்கள் இடையேயான உரையாடல்கள் மற்றும் கதாபாத்திரங்களின் சித்தரிப்பு என அனைத்தும் மிகவும் சிறப்பாக கையாளப்பட்டிருந்தன.

ஒரு புதிய இயக்குநரும் அவரின் குழுவும், மண்ணின் மணத்தோடு கூடிய சுவாரஸ்யமான ஒரு படைப்பை உருவாக்கியிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இயக்குநர் ராஜா கருப்பசாமி, நடிகர்கள் மற்றும் படக்குழுவினர்; இவர்களுடன், இப்படத்துக்கு துணையாக நின்ற அனைவருக்கும் எனது பாராட்டுகள்.

என் ரசிகர்கள் மற்றும் சினிமாவை விரும்புபவர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்; “மொத ராத்திரி” திரைப்படத்தை திரையரங்குகளில் சென்று பார்த்து, அக்குழுவுக்கு ஆதரவு அளியுங்கள். முழு படக்குழுவுக்கும் எனது வாழ்த்துகள். தொடர்ந்து நல்ல படங்களை உருவாக்குங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

By admin