• Fri. Aug 28th, 2026

24×7 Live News

Apdin News

நேபாள வெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழர்களின் நிலை என்ன? கவலையில் குடும்பத்தினர்

Byadmin

Aug 27, 2026


சூப்பர் யாத்ரா ஏஜென்ஸி நிறுவன உரிமையாளர் சையது சாதிக்
படக்குறிப்பு, சூப்பர் யாத்ரா ஏஜென்சி நிறுவன உரிமையாளர் சையது சாதிக்
பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளை பாதுகாப்பாக மீட்டு, சொந்த ஊருக்கு அழைத்து வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்களது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் போட்டேகோஷி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் 170க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அந்த நேரத்தில் அங்கிருந்த 800க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளைத் தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த குறைந்தது 106 சுற்றுலா பயணிகள் நேபாளத்தில் சிக்கியுள்ளதாக சுற்றுலா ஏஜென்சிகள் கூறும் தரவுகள் தெரிவிக்கின்றன.

சென்னையை அடுத்த குரோம்பேட்டையைச் சேர்ந்த மஹாதேவ் கைலாஷ் யாத்ரா என்ற தனியார் ஆன்மீக சுற்றுலா நிறுவனம் மூலமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 49 ஆன்மீகப் பயணிகள் கைலாஷ் யாத்திரைக்குப் புறப்பட்டுச் சென்றனர். அதேபோல, கும்பகோணத்தில் செயல்பட்டு வரும் சுற்றுலா நிறுவனத்தின் மூலம் 57 பேர் நேபாளம் சென்றுள்ளனர்.

அந்த சுற்றுலாப் பயணிகளைத் தொடர்புகொள்ள முடியாத நிலை இருப்பதால் அவர்களது உறவினர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

By admin