• Wed. Sep 2nd, 2026

24×7 Live News

Apdin News

நேபாள வெள்ளம்: ‘சுரங்கத்துக்குள் ஆற்றுநீர் என்னை 20 நிமிடங்கள் துரத்தியது”

Byadmin

Sep 2, 2026


வெள்ளம் சூழ்ந்த சுரங்கப்பாதையில் இருந்து தப்பிய பிறகு, தனது சகாக்கள் சிலர் காணாமல் போனதை எவ்வாறு கண்டறிந்தார் என்பதை பெம்பா துண்டு தமங் பிபிசியிடம் விவரித்தார்
படக்குறிப்பு, வெள்ளம் சூழ்ந்த சுரங்கப்பாதையில் இருந்து தப்பிய பிறகு, தனது சகாக்கள் சிலர் காணாமல் போனதை எவ்வாறு கண்டறிந்தார் என்பதை பெம்பா துண்டு தமங் பிபிசியிடம் விவரித்தார்

    • எழுதியவர், அசோக் டஹால் மற்றும் கமல் பரியார்
    • பதவி, பிபிசி நேபாளி, மத்திய நேபாளத்தின் நுவாகோட் பகுதியில் இருந்து
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

கடந்த வாரம் கடுமையான திடீர் வெள்ளத்தால் மூழ்கிய நிலையில், திரிசூலி ஆற்றில் இருந்து பாய்ந்து வந்த நீர் தங்களது சுரங்கப்பாதைக்குள் மோதிய பேரழிவு தருணத்தைப் பற்றி நேபாள நீர்மின் நிலைய தொழிலாளர்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.

சுமார் 30 பேரைக் கொண்ட குழு சுரங்கப்பாதையின் கான்கிரீட் பூச்சு வேலையைச் செய்து கொண்டிருந்தபோது, திடீரென வீசிய பலத்தக் காற்றுடன் இது தொடங்கியது என்று பெம்பா துண்டு தமங் கூறுகிறார்.

அந்தக் காற்று வீச்சால் பிளைவுட்கள் காற்றில் பறந்தன மற்றும் கனரக இயந்திரங்கள் பெயர்ந்து விழுந்தன. வெளியே சற்று தொலைவில், வீடுகள் ஏற்கெனவே அடித்துச் செல்லப்பட்டிருந்தன.

“நான் சுரங்கப்பாதையின் வெளி வாயிலை நோக்கி ஓடினேன்,” என்று அவர் கூறினார். “நீர் என் பின்னால் என்னைத் துரத்தியது; நான் அதற்கு முன்னால் ஓடிக்கொண்டிருந்தேன்.”

அந்த நேரத்தில் வீட்டில் இருந்த தமங்கின் குடும்ப உறுப்பினர்கள் சிலர் உயிரிழந்தனர். கடந்த வாரத்தில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்துக்குப் பிறகு நேபாளத்தின் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,000-ஐத் தாண்டியுள்ளது, மேலும் சுமார் 4,000 பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

By admin