• Thu. May 28th, 2026

24×7 Live News

Apdin News

பங்குச் சந்தை மதிப்பீட்டில் இந்தியாவைப் பின்னுக்குத் தள்ளியுள்ள தைவான் – இனி வரும் காலம் எப்படி இருக்கும்?

Byadmin

May 28, 2026


தைவானின் டிஎஸ்எம்சி நிறுவனம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தைவானின் டிஎஸ்எம்சி நிறுவனம், அதன் துறையில் உள்ள மற்ற எல்லா நிறுவனங்களையும் விஞ்சி நிற்பதாகத் தெரிகிறது.

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

பங்குச் சந்தை மதிப்பீட்டில் திங்கள்கிழமை அன்று தைவான் இந்தியாவை முந்தியது.

இதற்குப் பின்னால் இருந்த மிக முக்கியக் காரணம், உலகின் மிகப்பெரிய சிப் தயாரிப்பு நிறுவனமான தைவான் செமிகண்டக்டர் மேனுஃபேக்ச்சரிங் நிறுவனத்தின் (டிஎஸ்எம்சி) பங்குகளில் ஏற்பட்ட அசுர வளர்ச்சியே ஆகும்.

பங்குச் சந்தை மதிப்பீடு அல்லது சந்தை மூலதனம் என்பது ஒரு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பின் கூட்டுத் தொகையாகும்.

உதாரணமாக, இந்தியாவில் உள்ள தேசிய பங்குச்சந்தையான என்எஸ்இ மற்றும் மும்பை பங்குச்சந்தையான பிஎஸ்இ ஆகியவற்றில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு தற்போது 4.92 டிரில்லியன் டாலராக உள்ளது.

பங்குச் சந்தை மதிப்பீட்டில் தைவான் இந்தியாவை முந்தியிருந்தாலும் கூட, சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்புகளின்படி, இந்தியாவின் 4.15 டிரில்லியன் டாலர் பொருளாதாரமானது, தைவானின் 977 பில்லியன் டாலர் ஜிடிபியை விட இன்னும் மிகப் பெரியதாகும், மேலும் இது உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாகவும் உள்ளது.

By admin