• Thu. Oct 29th, 2026

24×7 Live News

Apdin News

படத்தின் கிளைமேக்ஸில் ட்விஸ்ட் இருக்கிறது- ‘பனி விழும் இரவு’ பட நாயகன் அருண் கார்த்தி

Byadmin

Oct 29, 2026


இயக்குநர் செ.ரா. ராஜேஷ் இயக்கத்தில், பவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பனிவிழும் இரவு’.

அருண் கார்த்தி கதாநாயகனாகவும், எனாக்ஷி கங்குலி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் வரும் அக்டோபர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் படத்தின் இயக்குநர் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டு, படத்தின் உருவாக்கம், கதைக்களம் மற்றும் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட அனுபவங்கள் குறித்துப் பகிர்ந்துகொண்டனர்.

அப்போது நிகழ்ச்சியில், கதாநாயகன் அருண் கார்த்தி பேசியதாவது:-

ஒரு படத்தில் ஹீரோவாக நடித்து, அந்தப் படம் வெளியாகும் இந்தத் தருணத்தில் நான் என்ன உணர்கிறேன் என்பதைச் சொல்ல வார்த்தைகள் இல்லை.

இந்த மேடையில் நான் பேசும்போது, “டான்” படத்தின் கிளைமாக்ஸில் வருவதுபோல, என் அப்பா எங்கோ ஒரு மூலையில் நின்று கொண்டு என்னைப் பெருமையுடனும் சந்தோஷத்துடனும் பார்த்துக் கொண்டிருப்பார் என்ற நம்பிக்கையோடு என் பேச்சைத் தொடங்குகிறேன். லவ் யூ பா, மிஸ் யூ பா!

பனிவிழும் இரவு திரைப்படம் உருவான கதையைச் சொல்ல வேண்டும் என்றால், முதலில் எனக்கு ஜே.கே. பிரதர் அவர்களைத்தான் தெரியும். அவருடன் ஏற்கெனவே ஒரு பயணத்தில் இணைந்து பணியாற்றியிருக்கிறேன்.

அவர்தான் இயக்குநர் ராஜேஷ் பிரதர் ஒரு த்ரில்லர் கதையை வைத்திருப்பதாகச் சொன்னார். கதையைப் படித்தவுடன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதன்பிறகு பல விவாதங்கள், சந்தேகங்களுக்கான விளக்கங்கள் என எல்லாம் முடிந்து இந்தப் படத்தைத் தொடங்கினோம்.

எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் சதா முருகன் சார் எங்களைச் சிரிக்க வைத்துக்கொண்டே இருப்பார். அவருடைய நகைச்சுவை உணர்வு, எல்லோரையும் உற்சாகமாக வைத்திருக்கும் விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

படப்பிடிப்பு முடிந்த பிறகு, இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு ஏ.ஆர்.கே. புரொடக்ஷன்ஸ் சார்பில் தனசேகரன் சார், சஞ்சய் பிரதர், ராமகிருஷ்ணன் சார் ஆகியோர் பெரிய அளவில் ஆதரவு கொடுத்தார்கள்.

பனிவிழும் இரவு படத்தையும் நீங்கள் ஆதரிப்பீர்கள் என்று நம்புகிறேன். இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் ட்விஸ்ட்டை மட்டும் உங்கள் விமர்சனங்களில் வெளிப்படுத்தாமல் இருந்தால், அது படத்தைப் பார்க்க வரும் ரசிகர்களுக்கு இன்னும் சிறப்பான அனுபவத்தைக் கொடுக்கும். இந்தப் படம் அக்டோபர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் திரையரங்குக்கு வந்து படத்தைப் பாருங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

By admin