தாக்குதலுக்குள்ளான அமெரிக்க தளத்தின் இருப்பிடத்தை ஈரான் ஊடகங்கள் வெளியிடவில்லை.
எனினும், அமெரிக்கா மீண்டும் ஏதேனும் ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டால், அதைவிட மிகக் கடுமையான மற்றும் தீர்க்கமான பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
அமெரிக்கா தொடர்ந்து போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ள ஈரான் கடற்படை, ஹார்முஸ் ஜலசந்தி வழியாகக் கடக்க முயன்ற அமெரிக்கா தொடர்புடைய எண்ணெய் விநியோகக் கப்பல் மற்றும் பிற 4 சர்வதேசக் கப்பல்களை எச்சரித்துத் திருப்பி அனுப்பியுள்ளதாகக் கூறியுள்ளது.
இதற்கிடையே ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மற்றும் ஓமான் நாடுகள் இணைந்து கூட்டாகக் கட்டுப்படுத்துவது போன்ற ஒரு புதிய அமைதி ஒப்பந்தம் தயாராகி வருவதாக வெளியான தகவல்களை அமெரிக்க அதிபர் டிரம்ப் முற்றிலுமாக நிராகரித்துள்ளார்.
அமெரிக்க அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய அதிபர் டிரம்ப், “ஹார்முஸ் சர்வதேசக் கடல்வழிப் பாதையை எந்தவொரு தனி நாடும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர அமெரிக்கா அனுமதிக்காது” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.