சேதங்கள் குறித்து ஆய்வு:
வெராகுவாஸ், ஹெரேரா மற்றும் லாஸ் சாண்டோஸ் ஆகிய மத்திய மாகாணங்களிலேயே சேதங்கள் அதிகம் ஏற்பட்டுள்ளதாக தேசிய சிவில் பாதுகாப்பு சேவையை சேர்ந்த ஒமர் ஸ்மித் ‘டெலிமெட்ரோ ரிபோர்டா’ செய்தி சேனலில் தெரிவித்தார். நூற்றுக்கணக்கான வானளாவிய கட்டிடங்களை கொண்ட தலைநகரில் எந்த சேதமும் ஏற்பட்டதாக தகவல் இல்லை என்றும் அவர் கூறினார்.
உள்ளூர் செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட காணொளிகளில், மத்திய மாகாணமான கோக்லேவில் உள்ள பெனோனோமே நகரில் கத்தோலிக்க பேராலயம் ஒன்று இடிந்து விழுவதும், ஒரு ஹோட்டலின் முகப்பு பகுதியின் ஒரு பகுதி காரின் மீது விழுவதும் பதிவாகியிருந்தன. உடனடி உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
பசிபிக் பெருங்கடல் பகுதியை சுற்றி எரிமலைகள் மற்றும் புவித்தட்டு பிளவுகள் கொண்ட 40,000 கிலோமீட்டர் நீளமுள்ள ‘ரிங் ஆஃப் ஃபயர்’ எனப்படும் பகுதியில் பனாமா அமைந்துள்ளது; உலகின் பெரும்பாலான நிலநடுக்கங்கள் இப்பகுதியிலேயே நிகழ்கின்றன.
நிலநடுக்க மையம் அமைந்திருந்த பகுதிக்கு அருகிலுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து ஆய்வு செய்து வருவதாக பனாமாவின் பொது பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.