• Fri. May 1st, 2026

24×7 Live News

Apdin News

பப்லோ எஸ்கோபாரின் 80 நீர்யானைகளை கொல்ல கொலம்பியா முடிவு ஏன்? ஆனந்த் அம்பானி எதிர்வினை என்ன?

Byadmin

May 1, 2026


எஸ்கோபாரின் 80 நீர்யானைகளை கொல்ல கொலம்பியா முடிவு ஏன்?  ஆனந்த் அம்பானி எதிர்வினை என்ன?

பட மூலாதாரம், Getty Images/AFP

பல ஆண்டுகளாக கொலம்பியா போராடி வரும் ஒரு சிக்கலில் இருந்து விடுபட உதவ, ஓர் இந்திய கோடீஸ்வரரின் மகன் முன்வந்துள்ளார். அந்தச் சிக்கல், பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னன் பப்லோ எஸ்கோபாருடன் தொடர்புடைய நீர்யானைக் கூட்டம்.

கடந்த 1993-இல் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட எஸ்கோபார், ஓர் ஆண் மற்றும் ஒரு பெண் நீர்யானை உட்பட பல வெளிநாட்டு விலங்குகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்திருந்தார். இவை “கோகோயின் நீர்யானைகள்” என்று அழைக்கப்படுகின்றன.

அவற்றின் எண்ணிக்கை பெருகியது, கொலம்பியா அரசு அவற்றைக்கட்டுப்படுத்த ஆண்மை நீக்கம் உள்ளிட்ட பல்வேறு முறைகளை முயன்று பார்த்தும் பலன் கிடைக்கவில்லை. இதனால் சுமார் 80 விலங்குகளைக் கொல்ல அரசு முடிவு செய்துள்ளது.

ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி, குஜராத் மாநிலத்தில் உள்ள தனது சொந்த வந்தாரா உயிரியல் பூங்காவில் அந்த விலங்குகளை “பெற்றுக்கொண்டு பராமரிக்கத் தயாராக” இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த முன்மொழிவு குறித்து கொலம்பியா இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

By admin