• Mon. Aug 24th, 2026

24×7 Live News

Apdin News

பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து – விஜயின் அறிவிப்பு குறித்து கிராம மக்கள் கூறுவது என்ன?

Byadmin

Aug 24, 2026


விஜயின்  அறிவிப்பு குறித்து பரந்தூர் மக்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், DIPR

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் கைவிடப்படுவதாக, சட்டப்பேரவையில் திங்கள்கிழமையன்று முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.

அரசின் அறிவிப்புக்கு பரந்தூர் கிராம மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஆனால், “மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும்” என, தி.மு.க விமர்சித்துள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் 110வது விதியின்கீழ் பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாக, முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்தார்.

அப்போது பேசிய அவர், “சென்னையில் உள்ள மீனம்பாக்கம் விமான நிலையம், இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தால் இயக்கப்படுகிறது. தற்போது ஆண்டுக்கு 30 மில்லியன் பயணிகளைக் கையாளும் திறன் கொண்டதாக இது உள்ளது” எனக் கூறினார்.

வளர்ந்து வரும் சென்னை மாநகரத்தின் தேவைகள், பயணிகளின் வசதிகள், சரக்கு போக்குவரத்தை அதிகரிக்கும் வகையில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான தேவை ஏற்பட்டுள்ளதாக தனது பேச்சில் முதலமைச்சர் குறிப்பிட்டார்.

By admin