• Wed. Nov 18th, 2026

24×7 Live News

Apdin News

பிரதமர் நரேந்திர மோதி ஆட்சிக்கு வந்ததில் இருந்து வெளிநாட்டுப் பயணங்களுக்கு எவ்வளவு செலவாகியுள்ளது?

Byadmin

Nov 18, 2026


'12 ஆண்டுகள், ரூ.900 கோடி' - பிரதமர் மோதியின் வெளிநாட்டு பயணச் செலவுகள் பற்றிய ழு விவரம்

    • எழுதியவர், ஜாஸ்மின் நிஹலானி
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

பிரதமர் நரேந்திர மோதி ஆட்சிக்கு வந்ததில் இருந்து 12 ஆண்டுகளில் அவருடைய வெளிநாட்டுப் பயணங்களுக்கு ரூ.900 கோடிக்கும் அதிகமாகச் செலவிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளான மக்களவை மற்றும் மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் இந்தத் தகவலை வழங்கியுள்ளது.

ஜூன் 2014 முதல் ஜூலை 2026 வரையிலான தரவுகள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தக் காலகட்டத்தில் பிரதமர் மோதி 81 நாடுகளுக்கு 183 முறை பயணித்துள்ளார்.

ஜூலை மாதத்திற்குப் பிறகு அவர் மேலும் மூன்று முறை பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணங்களுக்கான செலவுகள் குறித்த பொதுத் தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.

அதேபோல முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மே 2004 முதல் மே 2014 வரையிலான 10 ஆண்டுகளில் 96 நாடுகளுக்கு பயணித்துள்ளார்.

By admin