• Wed. May 20th, 2026

24×7 Live News

Apdin News

பிரதமர் மோதி குறித்து வாக்குவாதம் செய்த செய்தியாளர் – நார்வேயில் என்ன நடந்தது?

Byadmin

May 19, 2026


நார்வே, இந்தியா, மோதி, பத்திரிகையாளர் சந்திப்பு, வாக்குவாதம்

பட மூலாதாரம், X/@Narendramodi

படக்குறிப்பு, நார்வே பிரதமருடன் இந்திய பிரதமர் நரேந்திர மோதி
பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

நார்வேயில் நடைபெற்ற இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தியாளர் சந்திப்பில், பத்திரிகையாளர் ஒருவருக்கும் அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

முன்னதாக, நார்வே பிரதமர் ஜோனாஸை சந்தித்த பிறகு, நார்வே பத்திரிகையாளர் ஒருவர் பிரதமர் மோதியிடம் கேள்வி எழுப்பியபோது, அவர் பதிலளிக்காமல் அங்கிருந்து சென்றதாகத் தெரிகிறது.

இந்த இரு சம்பவங்களும் இந்தியாவில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகின்றன.

இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் மெஹுவா மொய்த்ரா உள்ளிட்ட பலர் இதற்கு எதிர்வினையாற்றியுள்ளனர்.

செய்தியாளர் சந்திப்பின் போது, நார்வே பத்திரிகையாளர் ஒருவர், இந்தியாவில் நடப்பதாகக் கூறப்படும் ‘மனித உரிமை மீறல்கள்’ மற்றும் பிரதமர் நரேந்திர மோதி ‘கடினமான கேள்விகளை எதிர்கொள்ளாமல் இருப்பது’ தொடர்பான கேள்வியை இந்திய வெளியுறவு அமைச்சக அதிகாரியிடம் கேட்டார்.

By admin