• Sun. Nov 29th, 2026

24×7 Live News

Apdin News

பூமியை மோத வரும் சிறுகோள்களை நம்மால் தடுக்க முடியுமா? விஞ்ஞானிகளின் முதல் முயற்சி கூறுவது என்ன?

Byadmin

Nov 29, 2026


விண்கல் மோதலுக்கு முன்னும்(இடதுபுறம்) பின்னும்; விண்கலம் மோதியதால் ஏற்பட்ட பள்ளத்தை இதில் காணலாம்.

படக்குறிப்பு, விண்கல் மோதலுக்கு முன்னும்(இடதுபுறம்) பின்னும்; விண்கலம் மோதியதால் ஏற்பட்ட பள்ளத்தை இதில் காணலாம்.

    • எழுதியவர், ரெபெக்கா மொரெல், ஆலிசன் ஃபிரான்சிஸ் & டோனி ஜோல்லிஃப்
    • பதவி, பிபிசி சயின்ஸ்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

நாசா திட்டமிட்டு மோத வைத்த சிறுகோளின் முதல் படங்கள், அதன் மேற்பரப்பில் ஒரு விளையாட்டு அரங்கத்தின் அளவுக்குச் சமமான மிகப்பெரிய பள்ளம் உருவாகியிருப்பதை வெளிப்படுத்தியுள்ளன. இந்தப் பெரிய சேதம், 2022ஆம் ஆண்டில் நாசாவின் விண்கலம் டைமோர்ஃபோஸ் (Dimorphos) என்ற சிறுகோளுடன் மோதியபோது ஏற்பட்டது.

அந்தச் சிறுகோள் பூமிக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை. ஆனால், விண்வெளியில் பயணிக்கும் பெரிய கற்களின் பாதையை மாற்றுவது சாத்தியமா என்பதைச் சோதிப்பதற்காக, மனித குலத்தின் கோள பாதுகாப்புத் திறன்களை மதிப்பீடு செய்யும் ஒரு பரிசோதனையாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

நான்கு ஆண்டுகள் கழித்து இப்போது, ஐரோப்பிய விண்வெளி முகமையின் (ESA) ஹெரா (Hera) என்ற விண்கலம், அந்த மோதலின் விளைவுகளை முழுமையாக ஆராய்வதற்காக அந்தப் பகுதியை ஆராய்ந்து வருகிறது.

“இந்தப் பள்ளம், அந்த வான்பொருளின் அளவுக்கே கிட்டத்தட்ட சமமாக உள்ளது. இது உண்மையிலேயே பிரமிக்க வைக்கிறது,” என்று ஹெரா அறிவியல் குழுவில் இடம்பெற்றுள்ள கோள அறிவியலாளர் முனைவர் சபினா ரடுக்கன் தெரிவித்தார்.

“இறுதியாக என்ன நடந்தது என்பதை நேரில் பார்த்தபோது எனக்கு ஏற்பட்ட உணர்வுகளை வார்த்தைகளில் விவரிப்பது மிகவும் கடினம். பள்ளங்களை மிகவும் நேசிக்கும் ஒருவராக, இது அழகாகவும் இருக்கிறது என்று கூறலாம்,” என்றும் அவர் கூறினார்.

By admin