• Tue. Sep 15th, 2026

24×7 Live News

Apdin News

பெக்கி ஜோன்ஸ்: இல்லாத மூளைக் கட்டிக்காக 11 ஆண்டுகள் கீமோதெரபி பெற்ற பெண் உண்மையை கண்டறிந்தது எப்படி?

Byadmin

Sep 15, 2026


ஸ்கேன்களில் கட்டிக்கான எந்தத் தடயமும் தெரியாதபோதும், இன்னும் சில மாதங்களே உயிருடன் இருப்பார் என்று பெக்கி ஜோன்ஸிடம் தெரிவிக்கப்பட்டது.
படக்குறிப்பு, ஸ்கேன்களில் கட்டிக்கான எந்தத் தடயமும் தெரியாதபோதும், இன்னும் சில மாதங்களே உயிருடன் இருப்பார் என்று பெக்கி ஜோன்ஸிடம் தெரிவிக்கப்பட்டது.

    • எழுதியவர், டேவிட் லம்ப்

    • எழுதியவர், வனேசா பியர்ஸ்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

பெக்கி ஜோன்ஸுக்கு 21 வயதாக இருந்தபோது, அவருக்கு குணப்படுத்த முடியாத மூளைக் கட்டி இருப்பதாகவும், இன்னும் சில மாதங்களே உயிருடன் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது அவர் தனது இணையை சந்தித்து நீண்ட காலம் ஆகியிருக்கவில்லை. காவல்துறையில் பணியாற்ற வேண்டும் என்ற கனவும் அவருக்கு இருந்தது. ஆனால், திடீரென அவரது எதிர்காலமே கேள்விக்குறியானது.

அனுபவம் வாய்ந்த புற்றுநோய் மருத்துவர் ஒருவர் அளித்த இந்த நோயறிதலின் அடிப்படையில், 11 ஆண்டுகள் கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்தச் சிகிச்சை அவரது வாழ்க்கையை மாற்றியது. அவர் அடிக்கடி வாந்தி மற்றும் குமட்டலால் அவதிப்பட்டார். குடும்ப நிகழ்வுகளில் கலந்துகொள்ள முடியவில்லை. அவரது பணி வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. எப்போதும் “மிகுந்த பதற்றத்துடன்” வாழ்ந்ததாக அவர் கூறுகிறார்.

தற்போது 34 வயதாகும் பெக்கி, தனக்கு ஒருபோதும் புற்றுநோய் இருந்ததில்லை என்பதை சமீபத்தில் அறிந்துகொண்டார். அவருக்கு மூளையில் ஏற்பட்ட அழற்சியே பிரச்னைக்குக் காரணம் என்றும், அதற்கு ஸ்டீராய்டு மருந்துகள் மூலம் சிகிச்சை அளித்திருக்க முடியும் என்றும் தெரியவந்தது.

இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பெக்கி, நீண்ட காலம் அல்லது தேவையற்ற புற்றுநோய் சிகிச்சை அளிக்கப்பட்டதாகக் கூறி, கோவென்ட்ரி மற்றும் வார்விக்ஷயர் பல்கலைக்கழக மருத்துவமனைகள் என்.எச்.எஸ். அறக்கட்டளைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து வரும் 40-க்கும் மேற்பட்ட நோயாளிகளில் ஒருவர்.

By admin