• Wed. Sep 30th, 2026

24×7 Live News

Apdin News

பெண் யூட்யூபரின் ‘வீடியோக்களால்’ ஒரு கோடி மதிப்புள்ள நகை கொள்ளை – நால்வர் சிக்கியது எப்படி?

Byadmin

Sep 30, 2026


யூடியூபர் வீட்டில் கொள்ளையடித்ததாக கைது செய்யப்பட்ட நான்கு பேருடன் காவல்துறையினர்

படக்குறிப்பு, யூட்யூபர் வீட்டில் கொள்ளையடித்ததாகக் கைது செய்யப்பட்ட நால்வருடன் காவல்துறையினர்

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

“வீட்டைக் கண்டறிவதற்கு பெண்ணின் ரீல்ஸ் உதவி செய்துள்ளது. அவரது மகள் எந்தப் பள்ளியில் படிக்கிறார் என்பதை ரீல்ஸ் மூலம் கண்டறிந்து குற்றத்தில் ஈடுபட்ட நபர்கள் பின்தொடர்ந்துள்ளனர்” எனக் கூறுகிறார், கன்னியாகுமரி எஸ்.பி அன்சுல் நாகர். அத்துடன், பெண் யூட்யூபர் வெளியிட்ட காணொளிகள் மூலமாக நகை, பணம் வைக்கப்பட்டிருந்த இடத்தை அடையாளம் கண்டு, கொள்ளையடிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

நாகர்கோயிலில் பெண் யூட்யூபர் வீட்டில் சுமார் 110 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் நான்கு பேரை காவல்துறை கைது செய்துள்ளது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசியபோது, “தங்களிடம் இருக்கும் நகை, பணம் போன்ற விவரங்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவது சரியல்ல” என்று நாகர்கோயில் டிஎஸ்பி பிரகாஷ் எச்சரித்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே உள்ள தம்மத்துகோணம் பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் என்பவர் ஃபைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். ஏலக்காய் வியாபாரத்தில் ஈடுபடும் வணிகர்களுக்குக் கடன் உதவி செய்வது இவரது பிரதான தொழில். இவரது மனைவி மதுமிதா, கடந்த சில மாதங்களாக சமூக ஊடகங்களில் தீவிரமாக இயங்கி வந்துள்ளார். மதுமிதா தன்னிடமுள்ள நகைகள், பணம், தான் வாங்கும் புதிய ஆபரணங்கள் ஆகியவற்றைக் காணொளிகளாக வெளியிட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை இரவு (செப்டம்பர் 24) தனது வீட்டிலிருந்து சுமார் 110 சவரன் தங்க நகைகள் திருடு போய்விட்டதாக, ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் வினோத்குமார் புகார் அளித்தார்.

‘7 தனிப் படைகள், 160 சிசிடிவி கேமராக்கள்’

“சம்பவம் நடந்த நாளில் மாலை ஆறு மணியளவில் நெல்லை சென்றுவிட்டு இரவு 12 மணியளவில் வீடு திரும்பினோம். வீட்டின் பின்புறக் கதவு உடைக்கப்பட்டிருந்தது. மாடியிலுள்ள அறைக்குச் சென்று பார்த்தபோது நகைகள் திருடுபோனது தெரிய வந்தது” என்று காவல் துறையிடம் அளித்த புகாரில் வினோத்குமார் தெரிவித்துள்ளார்.

By admin