• Thu. Oct 29th, 2026

24×7 Live News

Apdin News

பேராசிரியர் கலையரசன் அதிகாலையில் காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்ட விவகாரத்தில் என்ன நடந்தது?

Byadmin

Oct 29, 2026


பேராசிரியர் கலையரசன்
படக்குறிப்பு, பேராசிரியர் கலையரசன்
பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

பேராசிரியர் கலையரசன் விவகாரத்தில் உள்ளூர் காவல் நிலையம் தவறு செய்துவிட்டதாகவும், அது உடனடியாகச் சரிசெய்யப்பட்டதாகவும் மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

“கலையரசன் மீது நடவடிக்கை எடுத்தது உள்ளூர் காவல் நிலையம் செய்த தவறு. அவர் சில ஆபாசமான கருத்துகளைப் பதிவிட்டதாகப் புகார் வந்ததால், காவல்துறையினர் அவரது வீட்டில் சோதனை செய்தனர். இந்த விவரம் காலையில் எனக்குத் தெரிவிக்கப்பட்டதும், காவல்துறையினரிடம் விளக்கிக் கூறினேன். அதன் அடிப்படையில் காவல்துறையினர் நடவடிக்கையை நிறுத்திவிட்டனர். 30 நிமிடங்களுக்குள் அவர் விடுவிக்கப்பட்டார். தவறு நடந்தால் உடனடியாக அதைச் சரிசெய்வோம்,” என்று சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் பொருளாதாரப் பேராசிரியர் ஏ. கலையரசன், பல்லாவரம் தவெக சட்டமன்ற உறுப்பினர் ஜெ. காமாட்சி குறித்து இன்ஸ்டாகிராமில் அவதூறான கருத்தைப் பதிவிட்டதாகக் கூறி, அக்டோபர் 28-ஆம் தேதி அதிகாலை ஐந்து மணியளவில் காவல்துறையினரால் அவரது வீட்டிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டார்.

ஆனால், அந்த இன்ஸ்டாகிராம் கணக்கு தன்னுடையது அல்ல என்றும், தனது புகைப்படத்தைப் பயன்படுத்திப் போலிக் கணக்கு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கலையரசன் தெரிவித்துள்ளார்.

காவல்துறை செய்தது என்ன?

கலையரசன்
படக்குறிப்பு, கலையரசன்

கலையரசன் அக்டோபர் 28ஆம் தேதி காவல்துறை தலைமை இயக்குநருக்கு (டிஜிபி) எழுதிய புகாரில், அதிகாலை ஐந்து மணியளவில் சாதாரண உடையில் வந்த மூன்று காவலர்கள் தன்னை வீட்டிலிருந்து அழைத்துச் சென்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.



By admin