• Thu. May 21st, 2026

24×7 Live News

Apdin News

பைசா கோபுரம் ஒரு பக்கம் சாய்ந்திருந்தாலும் கீழே விழாமல் இருப்பதன் ரகசியம் என்ன?

Byadmin

May 21, 2026


பைசாவின் சாய்ந்த கோபுரம், கட்டடங்கள், அறிவியல்

பட மூலாதாரம், Sol de Zuasnabar Brebbia vía Getty Images

பைசா நகர சாய்ந்த கோபுரம் இத்தாலியில் உள்ள பாரம்பரிய நினைவுச் சின்னங்களில் ஒன்றாகும்.

உலகில், ஒரு பக்கமாகச் சாய்ந்திருக்கும் ஒரே கட்டடம் அது மட்டுமே அல்ல.

நெதர்லாந்தின் நடனமாடும் வீடுகள் (Dancing Houses) முதல் சீனாவின் டைகர் ஹில் பகோடா வரை, உலகம் முழுவதுமே சற்று சாய்ந்த நிலையில் உள்ள நினைவுச்சின்னங்கள் உள்ளன.

ஆனால் அவை ஏன் சாய்ந்த நிலையில் உள்ளன? அதேசமயம், அப்படிச் சாய்வதால் அவை கட்டாயம் கீழே விழுந்துவிடும் என்று ஏன் சொல்லமுடியாது?

சில கட்டடங்கள் ஏன் சாய்ந்துள்ளன?

நெதர்லாந்தின் டெல்ஃப்ட் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் புவி தொழில்நுட்ப நடைமுறைகள் குறித்த இணைப் பேராசிரியர் மேண்டி கோர்ஃப் கருத்துப்படி, கட்டமைப்புகள் ஒரு பக்கமாகச் சாய்வதற்குப் பல காரணங்கள் உள்ளன.

By admin