• Sat. Nov 7th, 2026

24×7 Live News

Apdin News

பொலன்னறுவை வைத்தியசாலையின் விசேட சத்திர சிகிச்சை நிபுணர் விபத்தில் உயிரிழப்பு!

Byadmin

Nov 7, 2026


பொலன்னறுவை வைத்தியசாலையில் பணியாற்றிய 50 வயதுடைய விசேட சத்திர சிகிச்சை நிபுணர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (6)  மின்னேரியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.

பொலிஸாரின் தகவலின்படி, பொலன்னறுவை – ஹபரணை வீதியின் 39ஆவது மைல்கல் அருகே வெள்ளிக்கிழமை மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மின்னேரியாவிலிருந்து ஹபரணை நோக்கிப் பயணித்த கார், எதிர்த்திசையில் வந்த டிப்பருடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் இரு வாகனங்களினதும் சாரதிகள் காயமடைந்த நிலையில், ஹபரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது, காரைச் செலுத்திய விசேட சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் பொலன்னறுவை புதிய நகரப் பகுதியில் வசித்து வந்த விசேட சத்திர சிகிச்சை நிபுணர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

டிப்பர் லொறியின் சாரதி மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மின்னேரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

By admin