• Sat. Jun 20th, 2026

24×7 Live News

Apdin News

‘போராடடா ஒரு வாளேந்தடா’: தமிழ் சினிமா பாடல் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கானதாக மாறிய கதை

Byadmin

Jun 20, 2026


திரைப்பட பாடல்கள், சாதி, சமூகம், தமிழ்நாடு

பட மூலாதாரம், Thirumal Cine Films & Raaj Kamal Films International

படக்குறிப்பு, அலை ஓசை(இடது) மற்றும் தேவர் மகன் (வலது)

கோவிலுக்குள் எங்களையும் நுழைய அனுமதிக்க வேண்டும் என ஒரு கிராமத்தின் பட்டியல் சமூக மக்கள் அந்த கிராமத்தின் தலைவரிடம் கோரிக்கை வைக்க, அவர் அதற்கு செவிமடுக்காமல் அவர்களை கோவில் வாசலில் தடுத்து நிறுத்தி, அங்கிருந்தவாறே ‘கடவுளை வணங்கிக் கொள்ளுங்கள்’ என்கிறார்.

அப்போது அங்கு வரும் கதாநாயகன், ‘ஆதியில் சாதி பாகுபாடு கிடையாது, இது பாதியில் வந்தவர்கள் செய்த கொடுமை’ என தனது மக்கள் கோவிலுக்குள் செல்ல வேண்டுமென வலியுறுத்துகிறார்.

‘பட்டியல் சமூக மக்களை கோவிலுக்குள் அனுமதிக்க முடியாது’ என ஊர் தலைவர் மறுக்க, முஷ்டியை உயர்த்தி, கண்கள் சிவக்க, பெரும் கோபத்தோடு கதாநாயகன் பாடும் பாடல் தான், ‘போராடடா ஒரு வாளேந்தடா, வேங்கைகளோ இனி தூங்காதடா’.

1985இல் விஜயகாந்த் நடிப்பில் வெளியான ‘அலை ஓசை’ திரைப்படம் பெரும் வெற்றி பெற்ற ஒரு திரைப்படம் அல்ல. இன்னும் சொல்லப்போனால், அது விமர்சன ரீதியிலும் அவ்வளவு வரவேற்பைப் பெறவில்லை.

ஆனால் அதில் இடம்பெற்ற ‘போராடடா ஒரு வாளேந்தடா’ பாடல் கிட்டத்தட்ட பட்டியல் சமூக மக்களுக்கான ஒரு பாடலாக மாறிவிட்டது, பட்டியல் சமூக மக்களின் மகிழ்ச்சி, வெற்றி அல்லது கொண்டாட்டத்தின் அடையாளமாகவும், ‘தமிழ்நாட்டின் தலித் அரசியலின்’ முகமாகவும் அப்பாடல் மாறிவிட்டது என எழுத்தாளர்கள், விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள்.

By admin