• Mon. Sep 7th, 2026

24×7 Live News

Apdin News

‘போலி வேலை நேர்காணல் மோசடியால் என் சேமிப்பு மொத்தத்தையும் இழந்தேன்’ – லிங்க்ட்இன் வழியே என்ன நடந்தது?

Byadmin

Sep 7, 2026


'வேலை நேர்காணல் மோசடியில் எனது சேமிப்பை இழந்தேன்' - புதிய வேலைவாய்ப்பு மோசடி எப்படி நடக்கிறது?

பட மூலாதாரம், Getty Images

வேலை தேடுபவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். ஏனெனில் போலியான நேர்காணல் கருவிகளைப் பதிவிறக்கம் செய்யும்படி ஏமாற்றுவதற்காக, வேலை தேடுபவர்களை மோசடிக்காரர்கள் குறிவைத்து வருகின்றனர்.

இதில் பாதிக்கப்பட்ட ஒருவர், போலியான ஆட்சேர்ப்பு அதிகாரி ஒருவர் மூலம் லிங்க்ட்இனில் தொடர்புகொள்ளப்பட்டார். வேலைக்கான நேர்காணல் நடைமுறையில் பங்கேற்குமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து, பார்ப்பதற்கு சாதாரணமானதாக இருந்த ஆவணத்தை அவர் பதிவிறக்கம் செய்தார். ஆனால், அது தீங்கிழைக்கும் மென்பொருளாக இருந்தது.

சில மணி நேரங்களுக்குள், ஹேக்கர்கள் அவரது கிரிப்டோகரன்சி கணக்குகளில் இருந்த 18,000 பவுண்டுகள் சேமிப்பைத் திருடினர்

“கணிசமான தொகையை இழந்திருப்பது மிகவும் மோசமான உணர்வை ஏற்படுத்துகிறது. எனது மோசமான எதிரிக்குக்கூட இப்படியொரு நிலை ஏற்படுவதை நான் விரும்பமாட்டேன்” என்று பெயர் குறிப்பிட விரும்பாத அந்த நபர் கூறினார்.

கடும் போட்டி நிலவும் வேலைவாய்ப்புச் சந்தை

வேலைவாய்ப்பு தளங்களான லிங்க்ட்இன் மற்றும் இன்டீட், கடந்த சில மாதங்களில் வேலைவாய்ப்பு மோசடிகள் அதிகரித்து வருவதாக எச்சரித்துள்ளன.

By admin