ஒரிஜினல் சீரிஸ் பிரிவில் தனக்கென ஒரு தனித்துவ இடத்தை உருவாக்கி வரும் தமிழ் ஜீ5, தற்போது ‘ஆக்டோபஸ்’ (Octopus) எனும் பரபரப்பான தொடரை கொண்டுவர தயாராகியுள்ளது. வழக்கமான கதை சொல்லும் முறைகளுக்கு மாறாக, வலுவான பெண் கதாபாத்திரத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த தொடர்– மர்மம், உணர்வு மற்றும் சுவாரஸ்யத்தை ஒன்றிணைக்கிறது.
ஜெயச்சந்திர ஹாஷ்மி இயக்கியுள்ள ‘ஆக்டோபஸ்’ 7 எபிசோடுகளைக் கொண்ட தொடர் ஆகும். இதில் அஷ்வின், அர்ச்சனா, வினோத் கிஷன், சித்து குமரேசன் மற்றும் கலைவாணி பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஆக்டோபஸ் கதைக்களம்:
ஒரு இளம் பெண் காணாமல் போனதை தொடர்ந்து, அந்த உண்மையை கண்டறிய ஒரு நெருக்கமான அக்கம்பக்கத்தினர் ஒன்றிணைகின்றனர். இந்த தேடல், மறைந்திருக்கும் பல உண்மைகளை வெளிக்கொண்டு வரும் எதிர்பாராத நிகழ்வுகளுக்கு வழிவகுக்கிறது. இவ்வாறு மர்மம், உணர்வுகள் மற்றும் மனித உறவுகளை மையமாக கொண்டு கதை நகர்கிறது.
சமூக வலைதளங்களில் ‘ஆக்டோபஸ்’ தொடரின் ப்ரோமோ வெளியானது முதல், இந்த தொடர் ஆன்லைனில் குறிப்பிடத்தக்க கவனத்தை பெற்றுள்ளது. சுவாரஸ்யமான கதைக்களம், ரசிகர்களின் யூகங்கள், கணிப்புகள் என இயல்பான டிஜிட்டல் உரையாடல்களையும் உருவாக்கியுள்ளது.
மர்மத்தை தொடர்ந்து தக்கவைக்கும்:
வெறும் சஸ்பென்ஸ் திரில்லராக மட்டுமின்றி, நம்பிக்கை, உறவுகள், மன உறுதி மற்றும் மனிதர்களுக்கு இடையேயான உறவின் நீடித்த சக்தி உள்ளிட்ட பல்வேறு முக்கியமான கருப்பொருள்களையும் ‘ஆக்டோபஸ்’ ஆராய்கிறது.
அன்றாட வாழ்க்கையின் உண்மை தன்மையில் வேரூன்றிய இந்த தொடர், ஆழமான உணர்வுப்பூர்வமான கதை சொல்லல் மூலம் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் உருவாகியுள்ளது.
இறுதிவரை என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், மர்மத்தை தொடர்ந்து தக்கவைக்கும் விதத்திலும் இந்த தொடர் அமைந்துள்ளது.